யாழ்ப்பாணம் இளவாழை – மாதகல் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த கஞ்சா தொகை நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
வீட்டின் சமையல் அறையில் அடுப்பு அமைந்துள்ள இடத்தில் நிலத்திற்கு அடியில் இந்த கஞ்சா தொகை புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டுள்ள இந்த கஞ்சா தொகையில் பெறுமதி 60 இலட்சத்திற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.