யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் ரயில் காருடன் மோதியதில் ஒருவர் பலியாகி உள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக அறிய வருகின்றது.
today car&train accident @ jaffna
Posted by Senthooran Siva on Saturday, November 21, 2015
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் தான் மேற்படி விபத்து நேர்ந்துள்ளது.
கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள ரயில்வே கடவையில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வில்வராஜா சுதாகர் (வயது41) ஆவர். இவர் யாழ் இந்துவின் பழைய மாணவரும் பெரதெனியப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியும் ஆவார்.
இன்று மதியம் இடம்பெற்ற ஆதவன் (வயது28), அரவிந்தன் (வயது28), கம்பதாஸன் (வயது23) என்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கச்சேரி நல்லூர் வீதியில் மோதுண்ட கார் 150 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு சோமசுந்தரம் அவென்னியூ கடவையில் வீசப்பட்டுள்ளது.
புகையிரத சமிக்ஞையை கவனிக்காமல் சென்றுள்ளதனாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. ஆனால், அங்கு பாதுகாப்புக் கடவை இல்லாததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.