யாழ்ப்பாணம் கடற்கரையில் 118 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் மீட்பு

158

யாழ்.வல்வெட்டித்துறை கடற்கரையிலிருந்து 118 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதை பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு சென்ற கடற்படையினர் குறித்த கஞ்சா போதை பொருளை மீட்டனர்.

கடற்படையினரால் மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளை கடற்படையினர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கஞ்சா பொதிகளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

SHARE