யாழ்ப்பாணம் வந்தடைந்தார் ரணில் அமைச்சர் விஐயகலா வரவேற்பு பலாலியில்

417

 

 

யாழ்ப்பாணம் வந்தடைந்தார் ரணில் அமைச்சர் விஐயகலா வரவேற்பு பலாலியில்

CBE19x1U0AAozIL

 

யாழ்பாணத்திற்கான விஜயத்தைமேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்சிகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளமையானது பெரும் கவலையளிப்பதாக மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மககேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

DSCN1120

கர்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குணவுத்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய விஜியகலா, தாம் குறித்த நிகழ்விற்கு பாராபட்சம் காட்டாமல் அனைவருக்கும் அழைப்பு விடுத்ததாகவும் அதற்கமைய வடக்கு முதலமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனாலும் முதலமைச்சர் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் வடமாகாண சபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் கலந்துகொள்ளவில்லை.

இவ்வாறான செயற்பாடுகளினால் வடக்கு மாகாண செயற்பாடுகளில் தெற்கு அரசு செல்வாக்கு செலுத்தும் நிலைக்கு கொண்டு சென்றுவிடுகின்றது என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, யாருக்கும் யார் மேல் என்ன கோபதாபம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாது பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற காரணத்தினாலே வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் பிரதமர் வருகையை வடக்குமாகாணசபை புறக்கணிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE