யாழ்.எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் வாகன விபத்து

266
யாழ்ப்பாணம், தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து கிளாலி நோக்கிப் பயணித்த மினி பேரூந்து, எழுதுமட்டுவாள் சந்தியிலிருந்து கிளாலி வீதிக்குத் திருப்புகையில், யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச போக்குவரத்து பேரூந்துடன் மோதியதாலே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மினி பேரூந்து குடைசாய்ந்துள்ளதோடு, அதன் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE