யாழ் கடலில் புத்தருக்கு அனுமதி மறுப்பு

257

யாழ்.நாக­வி­கா­ரை­யினால் கடற்­க­ரை­யோரம் அல்­லது கட­லுக்குள் கட்­டப்­ப­ட­வி­ருந்த புத்தர் சிலை கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் அனு­மதி வழங்­கப்­ப­டா­ததால் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் அனு­மதி இல்­லாமல் கடற்­க­ரை­யோரம் அல்­லது கட­லுக்குள் எந்­த­வித கட்­டு­மா­னமும் மேற்கொள்ள முடி­யாது என்­பது யாழ். நாக­வி­காரை அதி­ப­திக்கு தெரிந்திருக்க வேண்டும் என தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்­சரும், தமிழ் முற்­போக்குக் கூட்­டணித் தலை­வ­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

புத்தர் சிலை நிர்மாணம் தடை செய்­யப்­பட்­ட­தா­னது, நாட்டின் இன மத சக­வாழ்­வுக்கு ஏற்­பட்­டுள்ள தடை என என்­னிடம் முறை­யிட்ட ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் தேசிய அமைப்­பாளர் நிஷாந்த வண­சிங்­க­விடம் நான் இது பற்­றிய பதிலை தந்­துள்ளேன்.

இதை ஒரு கார­ண­மாக வைத்­துக்­கொண்டு சிங்­கள ஊட­கங்­களில் இன­வா­தத்தைக் கிளப்­பி­ய­வர்­க­ளுக்கும் பதில் கூறி­யுள்ளேன். இது சக­வாழ்­வுக்­கான தடை இல்லை. நாட்டின் சட்­டதிட்டங்­களை புரிந்­து­கொள்­ளா­மை­யினால் ஏற்­பட்ட சட்ட தடை என கூறி­யுள்ளேன். இந்த கரை­யோர பாது­காப்பு திணைக்­களம் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நேரடி கண்­கா­ணிப்பின் கீழ் வரு­கி­றது.

இந்த நாட்டில் ஒரு குறிப்­பிட்ட பிரி­வினர், விசேட வரம் பெற்­ற­வர்­க­ளைப் போல் நினைத்த நேரத்தில் சட்­டங்­களை மீறி எதுவும் செய்­யலாம் என்ற நிலைமை மாறி, இன்று சட்­டத்தின் ஆட்சி இயன்ற அளவில் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது.

தென்­னி­லங்­கையின் பல்­வேறு இந்து ஆல­யங்­களில் வானு­யர்ந்த கோபு­ரங்கள் பல எழுப்­பப்பட்­டுள்­ளன. எனவே வடக்­கிலும் விகா­ரை­களில் கட்­டு­மா­னங்கள் மேற்கொள்ளப்­ப­டலாம் என்­பது இயற்­கையே. ஆனால், சட்­டத்தை மீறி கட­லிலும், வானிலும் கட்­டு­மா­னங்­களை நினைத்­த­படி எவரும் மேற்கொள்ள முடி­யாது.

இந்த நிலைப்­பாட்டின் அடிப்படையிலேயே யாழ்.அரச அதிபர் வேதநாயகன் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே சட்டத்தை முன்னெடுக்கும் அரச அதிகாரிகளை சிங்கள ஊடகங்களில் குறை கூறுவது பிழையானதாகும் என்றும் கூறினார்.Jaffna_Tour

SHARE