குறித்த திரைப்படம் நேற்றிரவு 10.30 மணிக்கு வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் இளைஞர்கள் யாழ்.கஸ்தூரியார் வீதி முழுவதும் கூடியதுடன் வீதியில் வாழை மரங்கள், கொடிகளை கட்டி, வெடிகளை கொழுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர். இதனால் மக்கள் இந்த வீதியால் பயணிக்க முடியாத நிலை உருவானது.
இந்நிலையில் நேற்று இரவு திரைப்படம் வெளியிடப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பலர் திரையரங்க முற்றத்துலேயே படுத்துறங்கிய நிலையில் இன்றைய தினம் காலை திரைப்படம் மீண்டும் திரையிடப்படும் எனக் கூறப்பட்டதால் இளைஞர்கள் சிலர் இன்றைய தினமும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
பல இளைஞர்கள் மதுபோதையில் நின்று புரிந்த அட்டகாசத்தினால் வீதியால் பயணிக்க முடியாத நிலை உருவானது.
பின்னர் நண்பகல் 12.30மணிக்கு திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் இளைஞர்கள் நடிகர் விஜய் படத்திற்கு பெருமளவு பால் ஊற்றி வெடிகளை கொழுத்தி அட்டகாசம் புரிந்தமை குடாநாட்டில் மக்களுக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியதுடன் விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளனர்.