யாழ் கோப்பாய்ச் சந்தியில் மோட்டார் வண்டி -பேரூந்து விபத்தில்வைத்தியர் பரிதாப மரணம்!

248

நேற்று திங்கள் இரவு ஏழு மணியளவில் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வண்டி -பேரூந்து விபத்தில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை கட்டைவேலி பகுதியைச்சேர்ந்த செந்தூரன் எனப்படும் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 35 வயதான வைத்தியரே இவ்வாறு உயிரழந்தவராவார்.

கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிலையத்தில் தனது உந்துருளிக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு யாழ் நோக்கி செல்ல முற்பட்டபோதே யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த தனியார் பேருந்து மற்றொரு பேரூந்தை முந்தி செல்ல முற்பட்டபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது

இவ்விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.dr

SHARE