யாழ். சங்கானையில் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வு

304
காணாமற்போனோர் தொடர்பான முறை பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று யாழ். மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

யாழ். சங்கானை பிரதேச செயலகத்தில் இந்த ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை,  காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக 271 பேருக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 159 பேர் பிரசன்னமாகியிருந்ததாக ஆணைக்குழுவின் உதவி அதிகாரி தெரிவித்தார்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் 45 பேரிடமிருந்து புதிதாக முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE