யாழ் திருநெல்வேலியில் காவாலிகள் செய்த அட்டகாசம்!

268

மது பேதையில் காரில் வந்த குழுவினர் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றதினால் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி தபால்க்கட்டை சந்தியில் புதன் கிழமை இரவு 10 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது.

இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

தபால் கட்டை சந்தியில் உள்ள ஒழுங்கையில் இருந்து இளைஞர் ஒருவர் பலாலி வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்ட வேளை பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தி பக்கம் இருந்து கார் ஒன்று வந்துள்ளது.

அதனால் குறித்த இளைஞர் கார் சென்ற பின்னர் மோட்டார் சைக்கிளை செலுத்தும் நோக்குடன் ஒழுங்கை முகப்பில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பார்த்துக்கொண்டு நின்றுள்ளார்.

அவ்வேளை காரில் வந்தவர்கள் திடீர் என்று இளைஞருக்கு அருகில் காரினை நிறுத்தி என்ன பார்க்கின்றாய் என தகாத வார்த்தைகளால் ஏசியவாறு காரை விட்டு இறங்கி மதுபான போத்தல்களை வீதியில் உடைத்துள்ளனர்.

அதனால் பயந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டு விட்டு ஒழுங்கைக்குள் ஓடியுள்ளார்.அதனை அடுத்து காரில் வந்த குழுவினர் வீதியில் மது போத்தல்களை அடித்து உடைத்ததுடன் , இளைஞரின் மோட்டார் சைக்கிளையும் அடித்து நெருக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.தன்னை CP KE 1293 எனும் இலக்கமுடைய காரில் வந்தவர்களே தாக்க முற்பட்டதாக பொலிசாரிடம் குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தப்பி சென்ற காரினை தேடும் நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.

SHARE