
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விரைவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளிடப்பட்டுள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய முறையில் அவதானத்தை செலுத்தி, நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.