
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஹாவா குழுவின் தாக்குதல்கள் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான குழு வன்முறைகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காவல்துறை மா அதிபருடன் நடத்திய சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது எனவும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.