யாழ் பல்கலைகழகத்தினுள் ஊடுருவும் புலனாய்வாளர்களின் செயல்பாடுகள் முற்றிலும் களையெடுக்கப்பட வேண்டும். அரசுக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கோரிக்கை

257
Inline image 1
நீண்ட காலமாக புலனாய்வாளர்களின் செயல்பாடுகள் யாழ் பல்கலைகழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வந்தமை உலகறிந்த உண்மை. தமது அடக்கு முறைகளை முள்ளிவாய்க்கால் நினைவுதினம், மாவீரர்தினம் என வரும்போதேல்லாம் அரங்கேற்றி வந்தனர். தமிழர் இனம் சுய கௌரவத்துடன் வாழும் இனம், அவர்களுக்கென பூர்வீக பிரதேசம் உள்ள இனம். தான் விரும்பியபடி போரில் இறந்தவர்களை நினைவேந்தல் செய்ய உரித்துடைய இனம்.
எமது இனத்தின் உரிமைகளை பறித்தெடுத்து பேரினவாத சிந்தனையை பல்கலைகழகத்தினுள் புகுத்த முற்பட்ட ஒரு குழுவினராலேயே நடந்து முடிந்த அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது, உடன் இரகசிய திட்டங்களுடன் செயல்படும் அரச படையினரின் அல்லது புலனாய்வாளர்கள் என சொல்லப்படுபவர்களின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்களின் அமைதியான கல்வி உறுதிப்படுத்தப்பட வேண்டும். மாணவர்களிடம் எக்காலமும் குரோத உணர்வுகள் தோன்றாது. அவர்கள் பரஸ்பரம் சகோதர இன மாணவர்களிடம் அன்பு செலுத்துபவர்கள், ஆதரவாக பழகுபவர்கள்.
திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்ட ஏவல் கூட்டங்கள்தான் அமைதியின்மையை ஏற்படுத்தும் குற்றவாளிகள். அரசு மனசாட்சியுடன் செயல்பட்டு அனாவசிய அரசு படையினரின் அல்லது அவர்களின் ஏவல் காரர்களின் செயல்பாடுகளை நிறுத்துவார்கள் எனின் யாழ் பல்கலைக்கழகம் பூங்காவாக மாறும். குற்றவாளிகள் தமிழ் சிங்கள மாணவர்கள் அல்ல மறைமுக நிகழ்ச்சிநிரல் ஊடுருவல்காரர்களே என்றார்.
SHARE