யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் பினையில் !சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

314

யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை வழக்கில் மாணவர்கள் சார்பில் வாதடும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட யாழ் மாணவர் ஒன்றியத்தலைவர் சசிந்திரன் உள்ளிட்ட மூன்று தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மோதல் சம்வத்தில் சிங்கள மாணவர்களை தாக்கினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட் 3 தமிழ் மாணவர்களுடைய வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதிஸ்தரன் வழக்கினை ஒத்திவைத்தார்.

கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் வழமைக்கு மாறாக கண்டிய நடனத்தை நடாத்த முற்பட்டதையடுத்து தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு இடம்பெற்று அது கலவராமாக மாறியிருந்தது.

அந்த பிரச்சினையின் போது தாக்குதலுக்கு இலக்காகிய சிங்கள மாணவர்கள் தங்களைத் தாங்கியது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் என வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸார் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவரைக் கைதுசெய்ய முயன்றவேளை மாணவ தலைவர் நீதிமன்றில் சரணடைந்தார்.

இதன்போது மாணவத் தலைவரை பிணையில் விடுவித்த நீதிபதி, வழக்கினை இன்றைய தினம் வரைக ஒத்திவைத்திருந்தார். இன்றைய வழக்கு விசாரணையின் போது, கோப்பாய் பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய இரு தமிழ் மாணவர்களும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

jaffna_university

SHARE