யாழ் பொது நூலகத்தில் நிர்மாணிக்கப்படும் டாக்டர் அப்துல் கலாம் உருவச்சிலை

246

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மீது யாழ்ப்பாண மக்கள் கொண்டிருந்த அன்புக்கும், மரியாதைக்கும் அடையாளமாக யாழ். பொது நூலகத்தில் அவருடைய உருவச்சிலை விரைவில் அமைக்கப்படும் என யாழ்.இந்திய துணை தூதுவர் என்.நட்ராஜ் தெரிவித்திருக்கின்றார்.

APJ-Abdul-Kalam1

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக யாழ்.பொதுநூலகத்தில் அவருடைய உருவச்சிலை அமைக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். யாழ்பாண மக்கள் அவர் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் இன்றளவும் வைத்திருக்கின்றார்கள்.

இந் நிலையில் யாழ்.பொதுநூலகத்தில் முன்னதாகவே அமைக்கப்பட்டிருக்கும் இந்தியன் கோனர் பகுதியில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவச்சி லை ஒன்றை அமைப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். குறித்த உருவச்சிலை இந்தியாவில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது இங்கே கொண்டு வரப்பட்டவுடன் பொதுநூலகத்தில் உள்ள இந்தியன் கோனர் பகுதியில் அவருடைய உருவச்சிலை  நிறுவப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE