யாழ் மருதங்கேணி பகுதியில் கேரள கஞ்சா மீட்பு

237

499f3be2-7386-4281-a841-6dbc6e28d701

யாழ்-மருதங்கேணி- மாமுனை கடற்பரப்பில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பளை பொலிஸாரும், கடற்படை அதிகாரிகளும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 25 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சாவானது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதோடு, இது விநியோகிப்பதற்கு தயாராக இருந்ததாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை கொண்டு வந்த நபர்களை கைது செய்யும் நோக்கில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

SHARE