யாழ்.மறை மாவட்டத்தின் புதிய குரு முதல்வராக ஜெபரட்ணம் அடிகளார் நியமனம் –

307
யாழ்.மறை மாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்தந்தை கலாநிதி பத்தினாதர் யோசவ்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மறைமாவட்டத்தின் குரு முதல்வராக பணியாற்றிய அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அடிகளார் புதிய ஆயராக நியமிக்கப்பட்டதையடுத்து,

யாழ் மறைமாவட்டத்தின் குரு முதல்வராக அருட்தந்தை கலாநிதி ப. யோ. ஜெபரட்ணம் அடிகளார், யாழ் ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய குரு முதல்வரான அருட்தந்தை கலாநிதி ப. யோ. ஜெபரட்ணம் அடிகளார் கொழும்புத்துறை புனித சவேரியார் குருமட உப அதிபராகவும், விரிவுரையாளராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

புதிய குரு முதல்வர் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பிலான அறிவித்தலானது, நேற்று (09.11.2015) மாலை யாழ் மரியன்னை போராலயத்தில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து,

யாழ் ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் உத்தியோகபூர்வமாக அறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE