இந்தியாவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இன்று(24) திங்கட்கிழமை முற்றுகையிடப் பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள்தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இரண்டு தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவித்து மே 17 இயக்கத்தினர் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளது.
மேலும் யாழில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தொல். திருமாவளவனும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.