யாழ். மானிப்பாயில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் மானிப்பாய் – சங்கரபிள்ளை வீதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதில் சுமார் 70 வயதுடைய கந்தையா நீலாதேவி என்ற பெண்மணியே உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை வீட்டுக்கு வந்தவர்களுடன் சில வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு கொலைகாரர்கள் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
https://youtu.be/N0cPFdT2fjs?list=PLXDiYKtPlR7M0oGQs3obBvgEIIv3kLtID