ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ்.சுப்ரமணியம் பூங்காவில் இடம்பெறும் போதை ஒழிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியில் 200 ஆவது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வினை அடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத் தொகுதியை இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால திறந்துவைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வுகளில், அமைச்சர் சாகல ரட்ணாயக்க இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பொலிஸமா அதிபதி பூஜித ஜசுந்தர உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.