யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்த வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தீவர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக தற்போது வன்முறைகள் பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸார் இதனைக் குறிப்பிட்டனர்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்ட அமைச்சரின் உத்தரவுக்கு அமைய யாழ்ப்பாணத்தைக் கண்காணிக்க சிறப்புப் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக வாகனப் பேரணி ஊடாக பொதுமக்களுக்கு அவரச தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டு அறிக்கைகளும் விநியோகிக்கப்பட்டன.
அதன் விளைவாக வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.