யாழ் வேம்படிக்கு விஜயம் மேற்கொண்ட மைத்திரி புங்குடிதீவுக்கு விஜயம் செய்யாதாது ஏன்? மக்கள் விசனம்- 17 பாடசாலைகளை சந்தித்த மைத்திரி, உடன் தீர்வு.

371

 

பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடார்புபட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றத்தின் ஊடாக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார்

அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் மீள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் ஏற்பட இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (26) காலை யாழ்ப்பாணத்திற்கு திடீரென மேற்கொண்ட விஜயத்தின்போது வடமாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்தபோதே இவ்வாறு வலியூறுத்தினார்.

இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வட மாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்து உரையாடினார்.

சுமார் 17 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டதுடன் அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதைத் தொடர்ந்து அவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் கேட்டறிந்தார்.

தமது பாடசாலைகளில் காணப்படும் ஒரு சில குறைபாடுகள் தொடர்பாக மாணவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கமூட்டினர்.

உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவின்மை, விளையாட்டு மைதான நிர்மாணிப்பு, ஆசிரியர்களின் பற்றாக்குறைகளைப் போன்று, விசேடமாக வவூனியா பாடசாலை மாணவHகள் எதிர்கொண்டுள்ள போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு விளக்கமூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு சில பிரச்சினைகளுக்கு சனாதிபதி அதே சந்தHப்பத்தில் உhpய உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொண்டு தீர்வூகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

எழுத்துமூலம் பலப் பிரச்சினைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இதற்காக தனியான உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு பாடசாலை மாணவர்களுக்கிடையே அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு விளக்கமூட்டப்பட்டதுடன், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரை அறிவூறுத்தி விசேட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

அதனைத் தொடர்ந்து சனாதிபதி யாழ் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்தார். அவர்களிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் இது குறித்து தான் பொலுதும் கவலையடைவதாக ஜனாதிபதி கூறினார்.

அதனைத் தொடர்ந்து யாழ் நாக விஹாரைக்குச் சென்ற சனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

விஹாராதிபதியை சந்தித்த ஜனாதிபதி அவருடன் உரையாடியதுடன் விஹாரையின் குறைபாடுகள் தொடர்பில் விஹாராதிபதி விளக்கமூட்டினார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோர் ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர்.Jaffna school 01Jaffna school 02Jaffna school

9 total views, 9 views today

0

 

 

0

 

 

0

 

 

0

 

 

 

New

 

 

SHARE