யாழ். வைத்தியசாலை மருத்துவ நிபுணர் அரவிந்தன் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

253

முன்னைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது வளர்ந்தவர்களுக்கான நோயாக இருந்து வந்தது.

ஆனால், இன்றைய காலத்தில் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள எமது சிகிச்சை நிலையத்திற்குப் பல சிறுவர்கள் நீரிழிவு நோய்க்காகத் தினமும்அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனத் தெரிவித்தார் யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு தொடர்பான சிறப்பு வைத்திய நிபுணர் மகாலிங்கம் அரவிந்தன்.

யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டமொன்று நேற்று வியாழக்கிழமை பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இவ் விழிப்புணர்வுச் செயற்திட்டம் யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பான சர்வதேச மருத்துவக் கழகத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே வைத்திய நிபுணர் ம.அரவிந்தன் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாகவும் சிறிது சிறிதாக எமது உடற்பருமன்அதிகரித்துச் செல்வதே காரணமாக அமைந்து விடுகிறது.

நீரிழிவு நோய்க்கானஅறிகுறிகளாக அதிகரித்த தாகம், சில வேளைகளில் உடல் எடை குறைந்து கொண்டுசெல்லுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமான பசி என்பன காரணமாக அமைகின்றன.

ஆனால், சிலவேளைகளில் இவ்வாறான அறிகுறிகள் இல்லாமலும் நீரிழிவு நோய்க்கு ஒருமனிதன் ஆட்படலாம்.

அத்துடன் பிள்ளைகள் தங்களது பெற்றோருக்கு நீரிழிவு நோய் காணப்பட்டால் மிகவும் அவதானமுடன் செயற்பட வேண்டும்.

உடல் பருமனாகவிருப்பவர்கள் உடனடியாக உங்கள் உடல்எடையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

நீரிழிவு நோய் ஏற்படும்ஒருவருக்கு உடலிலுள்ள அனைத்து உறுப்புக்களும் பாதிப்படையும்.

கண் பார்வை குறைவடைதல், கால்களில் புண்கள் ஏற்படுதல், மாரடைப்பு ஏற்படுதல், சிறுநீரக செயலிழப்பு ஏற்படுதல் போன்ற பாதிப்புக்கள் உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவிருப்பதால் நீரிழிவு நோய்க்கு உட்பட்டவர்கள் ஆரம்பத்திலிருந்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

உலகளாவியரீதியில் கண்பார்வையிழப்பிற்கு மிக முக்கிய காரணியாக அமைவது இந்த நீரிழிவே.

அதுமாத்திரமன்றி கால்களில் ஆறாத புண்கள் உருவாகி இறுதியில் கால்கள் துண்டிக்கப்படும் துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாவதற்கும் உலகளாவிய ரீதியில் தினமும் பல எண்ணிக்கையானவர்கள் மாரடைப்புக் காரணமாக உயிரிழப்பதற்கும் நீரிழிவே காரணியாக அமைகிறது.

உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம், சமூக ஆரோக்கியம் ஆகிய மூன்றும் ஒவ்வொரு மனிதர்களிடம் சம அளவில் காணப்படுவதன் மூலமே நாம் ஆரோக்கியமுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியம் மிக்க உணவுகளைஉட்கொள்ளல், தினமும் உடற் பயிற்சி செய்தல், மகிழ்ச்சியாகவிருத்தல் என்பன அவசியமானது.

மகிழ்ச்சியாக இருப்பதற்கு உங்களுடைய அகச் சூழல், புறச் சூழல்என்பன உறுதுணையாக அமைய வேண்டும், தீய பழக்கங்களிருந்து விடுபடுவதன் மூலமும் ஆரோக்கியமுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

 

SHARE