நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (06) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 144 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
130 கிராம் ஹெரோயின், 159 கிராம் ஐஸ், 900 கிராம் 1725 கிலோகிராம் கஞ்சா ஆகியன சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களில் 05 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 08 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 108 சந்தேக நபர்களில் 12 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 128 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.