யுத்தகுற்றங்கள் தொடர்பான இலங்கையின் உத்தேச நீதிப் பொறிமுறை உள்நாட்டு சட்டங்களிற்கு அமைவானதாக காணப்பட வேண்டும் என இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவின் புதிய தலைவர் தீபிஹஉடகம தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜெனீவாவ விடயங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சருடன் ஆராயும்,இலங்கை அரசாங்கம் உருவாக்கவுள்ள பொறிமுறை குறித்து ஆலோசனையை வழங்கவும்,அதனை மேற்பார்வை செய்யவும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரமுள்ளது.
இலங்கைபொறுப்புக்கூறும் விவகாரங்களிறகு தானே தீர்வை கண்டிருக்குமானால் அது தற்போதைய நிலையை எதிர் கொண்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.