யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – உதய கம்மன்பில

236

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் சட்ட வல்லுனராக டெஸ்மன் டி சில்வா, மஹிந்த அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை யுத்தக் குற்றச் செயல் குறித்த விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் தலைவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தினால் இந்த அறிக்கையை வெளியிட முடியாவிட்டால் தாம் இந்த அறிக்கையை வெளியிட நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் திகதி இந்த அறிக்கையை டெஸ்மன் டி சில்வா அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தார்.

24 மணித்தியாலத்திற்குள் அரசாங்கம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உதய கம்மன்பில கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான விவாதம் நடத்தப்பட முன்னதாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அறிக்கையை சமர்ப்பிக்கத் தயக்கம் காட்டினால், மரபுகளை மீறி தாம் அரசாங்கத்தின் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE