யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான உயிரழிவுகளுக்கு காரணம் யார்?

463

 

வீ.ஆனந்தசங்கரி

பல தடவைகள் என்னால் எடுத்துக்கூறப்பட்டவை, சுட்டிக்காட்டப்பட்டவை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் பெருமளவில் ஊடகங்களால் வெளிக்கொணரப்படுவதில்லை. எதிர்காலத்திsangaree_sampanthan5ல் தமிழ் மக்கள் எதிர்நோக்கக்கூடிய பல்வேறு விடயங்கள் பற்றி முன்கூட்டியே சிந்திப்பவன் நான.; பலன் எதனையும்  எதிர்பார்க்காமல் சரியென தோன்றுவதை தயங்காமல் வெளிக்காட்டுபவன்.

தமிழரசு கட்சி, ஓர் புனிதமான ஒருவரால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்படும் போது அதற்கான அவசிய தேவையும் இருந்தது. ஆனால் நாட்டில் ஏற்பட்ட சில அசாதாரண சம்பவங்கள் நாட்டில் வாழ்கின்ற சகல தமிழ் மக்களையும், மலையக மக்கள் உட்பட, ஒரே குடையின் கீழ் இணைக்க வேண்டுமென்ற பேராசையோடு வாழ்ந்தவர் கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி அவர்கள். உடனடியாக சாதிக்கக்கூடிய, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றை ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டபின்பு காலப்போக்கில் மலையக மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர கனவு கண்டு, அது நிறைவேறாமல் எம்மை விட்டு பிரிந்தவர் செம்மல் தந்தை செல்வநாயகம் அவர்களே. அவர் உருவாக்கிய தமிழரசு கட்சியை அவருக்கே தோன்றிய நியாயமான காரணங்களால் முடக்கி வைத்துவிட்டு, 1972ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்து அதனை வளர்ப்பதிலேயே தன்னுடைய முழு கவனத்தையும் அதை செலுத்தினார். இறப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே தான் வகித்து வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியை, பெருந்தலைவர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.தொண்டமான் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை, முக்கூட்டுத் தலைமையின் கீழ்,  இரு கடமைகளை கவனிக்கும் பொருட்டு கொண்டு வந்தார். அவற்றில் முதலாவதாக 1949ம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உடைந்தது போல மீண்டும் இன்னொரு தடவை தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுவிடாமல்  தடுப்பதற்காகவும், தமிழ் மக்களின், நன்மையோ, தீமையோ, எந்தப் பிரச்சினையையும் தமிழர் விடுதலைக் கூட்டணியாலேயே தீர்க்கப்பட வேண்டுமென்ற நோக்கோடு அதை தமது சொத்தாக தமிழ் மக்களுக்கு இத்தலைவர்கள் விட்டுச் சென்றனர்

இத்தகைய பெரும் இலட்சியத்தோடு ஆரம்பித்த தமிழர் விடுதலைக் கூட்டணி நெறி தவறாமல் 32 ஆண்டுகள் பயணம் செய்து, துரதிஸ்டவசமாக 2004ம் ஆண்டு தடம் புரண்டது. அதை மேற்கொண்டவர்கள்; யாரென்பதை அடையாளம் கண்டு, அவர்கள் மக்களால் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர். 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ம் திகதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அன்றைய தமிழ் அமைப்புக்கள், முக்கிய பிரமுகர்கள், கல்விமான்கள், யாழ்ப்பாணம்-மட்டக்களப்பு பல்கலைகழக மாணவர் சங்கங்களின் தலைவர்கள், ஆகியோரின் ஒரே ஆசை, சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ், ஒரே கொள்கையுடன், ஒரே பொது சின்னமாகிய ‘உதய சூரியன்’ சின்னத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என முடிவு எடுத்திருந்தனர். கிளிநொச்சியில் உருவான சதித்திட்டத்திற்கமைய, முன்னிலையில் உள்ள இருவரை திருப்திப்படுத்துவதற்காக தமிழரசு கட்சியின் சின்னமாகிய ‘வீடு’ சின்னத்தில் போட்டியிட வேண்டுமென முட்டாளத்தனமான தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஏப்ரல் 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின் ஒவ்வொன்றாக இடம்பெற்ற அனர்த்தங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். யுத்தம் தொடர்வதில் ஆரம்பித்து  பல்லாயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இயக்கத்தினர், அவர்களின் போராளிகள், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரின் தியாகங்கள் யுத்தத்தை ஓர் முடிவுக்கு கொண்டுவந்தது. மேலும் அவர்களே பல்லாயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், கடத்தப்பட்டவர்க ளுக்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். இறுதியாக வீரமிக்க ஓர் தலைவன் அவருடைய குடும்பத்தினர் ஆகியோரின் துன்பகரமான முடிவு விடுதலைப் புலிகளின் அழிவிலேயே முடிந்தது. விடுதலைப்புலிகளின் தலைமை, ஏற்கனவே பொதுக்கொள்கை, பொதுச்சின்னம் ஆகிய சம்பந்தமாக முடிவாக கொண்டிருந்தபோதும் அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் முட்டாள்த்தனமாக எடுத்த மாறுபட்ட முடிவு துரதிஷ்டவசமானதாகும். ஓன்றிணைந்து, மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்து, போராடி, கண்ட கனவு நிறைவேறியிருந்தால் நாம் பின்வருவனவற்றை அடைந்திருக்கலாம்.

சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் பொதுக்கொள்கை, பொதுச்சின்னம்  ஆகியவற்றின் கீழ் போட்டியிட்டு இருப்பார்கள். அனைத்து வேட்பாளர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்று போர்நிறுத்த உடன்படிக்கை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு உடனடியாவோ அல்லது குறுகிய காலத்துக்குள்ளேயோ உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். மரணத்தை தழுவிக் கொண்டவர்களும், பிரபாகரன் உட்பட அனைவரும் உயிருடன் இருந்திருப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்கள் தாம் இழந்த கௌரவத்தை மீள பெற்றிருப்பார்கள்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்தேறிய மரணங்கள், அழிவுகள் அத்தனைக்கும் பொறுபானவர்கள் இருவர் என நான் குற்றஞ்சாட்டுகிறேன். 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில்  சம்பந்தப்பட்ட அனைவரும், புலிகள் உட்பட முழுமையாக சம்மதித்து ஒரு கொள்கை, ஒரு சின்னமாகிய உதயசூரியன் சின்னம், சகல கட்சிகளும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு தயாரான நிலையில் இருந்தனர். ஆனால் இருவரின் அடாவடித்தனத்துக்கு வேறு எதுவும் காரணமல்ல, இதற்கு ஒரே காரணம் அவர்களுடைய பதவி ஆசையே ஆகும். தமிழ் மக்களுடைய பொருளாதார அழிவும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் அழிவையும் விலையாகக் கொடுத்தே அவர்கள் இன்றும் தமது பதவிகளை அனுபவித்து வருகின்றார்கள். இவர்களில் ஒருவர் திருவாளர் அ.அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்ட பின் 2004ம் ஆண்டுவரை எனது முயற்சியால் இரு தடவைகள் பாராளுமன்றத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் நியமன பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவராவார். அத்துடன் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இரு தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக நியமனம் பெற்று வெற்றியும் பெற்றவர். பாராளுமன்ற பதவியையும் அதனுடன் சேர்ந்த சலுகைகளையும் நான்கு தடவைகள் நன்றாக அனுபவித்துவிட்டு, மோசடி மூலம், தமிழரசு கட்சியை உருவாக்கியவர் இறந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை செயலிழக்க வைத்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழரசு கட்சியை மீளபுதுப்பித்ததை நியாயப்படுத்த எக்காரணத்தை கூறுவார்? வேடிக்கை என்னவெனில் அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டே வன்னிக்குச் சென்று திரு.தங்கன் அவர்களின் கட்டளைக்கமைய தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்ததாக அறியப்படுகிறது. இப்பிரமுகரின் நடவடிக்கைகள் அன்று தடுக்கப்பட்டிருந்தால் அவர் பொறுப்புடன் செயற்பட்டிருப்பார். திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் தமிழரசு கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் மட்டுமல்ல இறுதிவரை அதன் பொதுச்செயலாளராகவும் கடமையாற்றி வந்தார். திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் தனது அறிக்கையொன்றில் தமிழரசு கட்சியின் மீள்புனரமைப்பானது எமது பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். அந்த அறிக்கையின் ஓர் பகுதி கீழே தரப்படுகிறது.

“விரும்பத்தகாத சக்திகள் எவையும் தமிழரசு கட்சியின் சின்னத்தையும் அதன் பெயரையும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே எனது கணவர் தமிழரசு கட்சியின் பதிவைப் பாதுகாத்து வைத்தார். தமிழரசு கட்சியை அவர் ஒருபோதும் புனரமைக்க எண்ணவில்லை.

அவரால் வளர்க்கப்பட்ட சிலர் தமிழரசுக் கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்யவும், அதனைப் புனரமைக்க முயல்வது கவலைக்குரியது. இவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையே இவர்கள் முறியடித்திருக்கிறார்கள்”.

இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பயங்கரமான நிலைமைக்கு யார் குற்றவாளிகள் என கண்டுபிடிக்க வேண்டியது மக்களின் கடமையாகும். 2004ம் ஆண்டு தொடக்கம் அவரால் உருவாக்கப்பட்ட அழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் நான் உறுதியாக நம்புகின்றேன். இன்று வடமாகாண சபை விடயத்தில் தலையிடுவதற்கு முன்பு நூறு தடவைக்கு மேல் சிந்திந்திருப்பார். அவர் தனது அதிகாரத்தின் எல்லையை அறிந்திருக்க வேண்டும்.

வீ.ஆனந்தசங்கரி

செயலாளர் நாயகம் – த.வி.கூ

SHARE