யுத்தத்தில் உயிழந்தவர்களுக்கு நினைவு தூபி ஒன்றை அமைக்க வேண்டுமென டக்ளஸ் முன்வைத்துள்ளார்.

321
Douglas_Devananda_3-600x398

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நினைவுத் தூபி ஒன்றை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் யோசனை முன்வைத்துள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்த நபர்களுக்காக வடக்கின் ஓமந்தை பகுதியில் நினைவுத் தூபி ஒன்றை அமைத்து வருடாந்தம் அவர்கள் நினைவு கூரப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.இதற்காக தினமொன்றையும் நிர்ணயிக்க வேண்டுமென யோசனையில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை போற்றும் வகையில் ஓமந்தையில் பொருத்தமான ஓர் இடத்தில் நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த நினைவு நிகழ்வுகளை நடாத்த தினமொன்றை நிர்ணயித்து அரசாங்கம் ஆண்டு தோறும் அந்த நிகழ்வுகளை நடத்த வேண்டுமேனவும் அவர் யோசனையில் கோரியுள்ளார்.பாராளுமன்ற டக்ளஸ் தேவானந்தாவின் இந்த யோசனை, பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

SHARE