வேதாளம் படத்தின் டீசர் வெளிவந்த 10 நிமிடத்தில் 1 லட்சம் ஹிட்ஸை தாண்டியது. 1 மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் ஹிட்ஸை தாண்டியது.
அதிலும் அஜித்தின் புது லுக், மிரட்டல் வாய்ஸ் என ரசிகர்களை கவர தற்போது வரை 80 ஆயிரம் லைக்ஸை வேதாளம் தாண்டியுள்ளது.
ஆனால், லைக்ஸ் மட்டுமே அதிகரித்து வர, ஹிட்ஸ் அப்படியே தான் இருக்கின்றது, குறிப்பாக இன்று காலை 5 மணி முதல் 8 மணி வரை யு-டியுபில் ஏற்பட்ட பிரச்சனையால் ஹிட்ஸ் லெவல் அதிகரிக்கவே இல்லை. கண்டிப்பாக இந்நேரம் குறைந்த 8 லட்சம் ஹிட்ஸை தாண்டியிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தற்போது 5 லட்சம் என்று காட்டி வருவதால், மற்ற படங்களின் சாதனைகளை வேதாளம் முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.