யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலக்க மத்திய அரசு திட்டம் – பிரதமர் மோடி தகவல்..!!

456

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பராச்சில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே உரையாற்றினார். அப்போது விவசாயத்துக்கான மானிய யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலக்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது என அவர் கூறினார்,

அப்போது அவர் பேசியதாவது:-

என்னைவிட விவசாயிகள் பிரச்சனை குறித்து வேறு யாரும் அதிகமாக புரிந்து கொண்டிருக்க முடியாது. முந்தைய ஆட்சியில் யூரியா இல்லாமல் இருந்தது. இப்போது என்னுடைய ஆட்சியில் யூரியா எளிதாக கிடைக்கிறது. 100 சதவிதம் வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவினை கொண்டுவர முடிவு செய்துள்ளோம். யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலப்பதால் அதை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், கெமிக்கல் தொழிற்சாலைகளில் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிசெய்ய முடியும். வேப்ப எண்ணெய் கலந்த யூரியா விவசாயிகளுக்கு பெரும் பயனளிக்கும், விவசாயிகளுக்கு பயனளிப்பது மட்டுமின்றி ஊழலையும் தடுக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SHARE