
யேமனில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
காவல்துறை திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டிருந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தென் யேமனின் முக்காலா துறைமுகத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.