யோசிதவின் வழக்கு முடிந்தால் மீண்டும் வழக்கு தொடரப்படும்: இராணுவ ஊடகப் பேச்சாளர்

239

625.117.560.350.160.300.053.800.210.160.70

தற்போது நடைபெற்று வரும் யோசிதவின் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் கடற்படை தரப்பில் யோசித மீது வழக்கு தொடப்பட்டு விசாரணைகள் நடைபெறும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது யோசித மீது இரண்டு வழக்குகள் பற்றியே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

ஒன்று யோசித கடைற்படையில் இணைவதற்தற்கான தகுதிகள் அவருக்கு இருந்தனவா என்பது தொடர்பிலும், மற்றையது கடற்படையில் இணைந்த பின்னர் அவர் மேற்கொண்ட சட்டரீதியற்ற வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் குறித்த விசாரணைகள் ஆகும்.

இதுபற்றிய விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் யோசித கடற்படை தரப்பிலான விசாரணைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டிவரும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கடற்படையில் இணைவதற்கான தகுதிகள் எதும் இல்லாத யோசிதவை ஏற்றுக் கொண்டமைக்கான காரணம் என்ன? என பிரிகேடியர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் யோசித இராணுவ பயிற்சி பெறும் காலப்பகுதியில் அவருடன் பயிற்சி பெற்ற சக பயிற்சியாளர்கள் மீது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இது பற்றிய விசாரணைகளும் யோசித மீது மேற்கொள்ளப்படும் எனவும் இதன்போது இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

SHARE