யோசிதவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

263

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவிற்கு எதிராக கடற்படையினர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கடற்படை லெப்டினனான யோசித, ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய காலத்தில் தனது சுய விருப்பின் அடிப்படையில் கடற்படைத் தளபதியின் அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறான வெளிநாட்டு பயணங்களை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு, கடற்படைத் தளபதிக்கு அறிவித்துள்ளது.

லெப்டினன் யோசித ராஜபக்ச கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பல தடவைகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்த வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் யோசித கடற்படைத் தளபதியின் அனுமதியை பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளார்.

கடற்படை அதிகாரியொருவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் கடற்படைத் தளபதியின் அனுமதியை எழுத்து மூலம் பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

எனினும் யோசித எவ்வித அனுமதியையும் பெற்றுக் கொள்ளவில்லை.

யோசிதவின் இந்த நடவடிக்கை குறித்து சில மாதங்களுக்கு முன்னதாக கடற்படை அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

இந்த அறிக்கை பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதன்படி, விரைவில் யோசிதவிற்கு எதிராக விரிவாக ஒழுக்காற்று விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

josintha

 

SHARE