யோசித கைது செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறேன்!- முரத்தட்டுவே ஆனந்த தேரர்

286
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அபயாராமய விஹாரதிபதி முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டி அபாயாரமய விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்…

போதியளவு காரணிகள் எதுவுமின்றி யோசித கைது செய்யப்பட்டுள்ளார்.

படையில் இணைந்து ஏனைய இளைஞர் யுவதிகள் படையில் இணைந்து கொள்ள முன்னுதாரணமாக யோசித திகழ்ந்தார்.

போர் இடம்பெற்ற காலத்தில் படையில் இணைந்து கொள்ள இளைஞர்கள் சற்றே பின்வாங்கியிருந்தனர்.

போரை நடத்திய இராணுவத் தளபதிகளின் பிள்ளைகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தனர்.

எனினும் கொடிய போரை இல்லாதொழித்த மஹிந்த ராஜபக்சவின் மகன் கடற்படையில் இணைந்து கொண்டார்.

ஏனைய இளைஞர் யுவதிகளுக்கு ஊக்கமூட்டுவதே இந்த செயற்பாட்டின் நோக்கமாகும்.

புதிய கட்சியொன்றின் ஊடாக அரசியலில் மீள பிரவேசிக்குமாறு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் கோருகின்றனர்.

தொடர்ந்தும் இந்த குரோத தரப்புடன் இணைந்திருப்பதில் பயனில்லை.

மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அதற்கு மஹிந்த தலைமை தாங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகவும் அமைந்துள்ளது என முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

 

SHARE