யோஷிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

207

கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையில் உள்ள யோஷித ராஜபக்ஸவுக்கு அவரதுரு பாட்டி வழங்கியதாக கூறப்படும் காணி தொடர்பான வழக்கு கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

பிரதான நீதவான் மொஹமட் சஹாப்தீன் முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யோஷித ராஜபக்ஸவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மிஹிந்து மாவத்தையில் உள்ள காணி தொடர்பான அறிக்கையை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

மேலும் காணி அளவீடு தொடர்பான அறிக்கையை காணி அளவீட்டு திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

யோஷித ராஜபக்ஸ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அவரது பாட்டி மருத்துவ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது அறிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதவான் அதனை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

SHARE