முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை நடாத்தி வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
இந்த விசாரணைகள் கடற்படை தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சுமார் காலை 9.30 மணி அளவில் அழைக்கப்பட்டிருந்த யோஷித்த ராஜபக்ஸவிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நிதி மோசடி பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையினால், அதற்கான காரணம் இதுவரை தமக்கு தெரியவில்லை எனவும் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.