லெப்னன்ட் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டமையானது அதிர்ச்சியான சம்பவம் அல்ல என்று மஹிந்த ராஜபக்ச தரப்பு கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா இந்தக்கருத்தை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்துக்கு முன்னரே இந்த கைது இடம்பெறப் போகிறது என்பதை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமையை சொய்ஸா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தமது எதிர்க்கட்சி அனைத்து மக்களின் சமவுரிமைக்காக போராடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை திசை திருப்புவதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்.