இதை உறுதிபடுத்தும் வகையிலான கடிதம் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி லிமிடடின் தலைவராக அசங்க தொடங்வெலவும், பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக உதய அபேசேகர, அசேல இத்தவெல, ரூபன் விக்ரமாராச்சி, சசிமாலி திஸாநாயக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதுடன்,
ரக்னா லங்கா பாதுகாப்பு சேவையின் புதிய தலைவராக விக்டர் சமரவீர, பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக ஜயந்த தனபால, ஏ.ஏ.விக்ரமசிங்க, தர்மசேன ஹப்புதந்திரி, சரத் ஜயதிலக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அது மாத்திமல்லாது இராணுவ சேவை அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரகளாக பி.ஜி.நில்மினி பெரேரா, நிமல் பெனாண்டோ, சிறிகல் வி சில்வா ஆகியோரும்,
தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கே.எம்.பராக்கிரம ராஜ் கருணாரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டீ.பஸ்நாயக்க ஆகியோர் இதன் போது கலந்துக்கொண்டுள்ளனர்.