இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் பிரவீன் குமார் ஆகியோர், அவுஸ்திரேலியாவில் வைத்து மதுபோதையில் இருந்த ஒரு இந்திய ரசிகனை மிரட்டிய சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய நான்கு போட்டியிலும் படு தோல்வியடைந்து 4-0 என தொடரை இழந்தது.
இதனால் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு இந்திய அணி உள்ளானது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, பிரவீன் குமார் ஆகியோர் ஒரு குடிகார இந்திய ரசிகருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ தற்போது வெளியாகிவுள்ளது.
குறித்து வீடியோவில், Gabba மைதானத்தில், இந்திய வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது. அங்கு வந்த இந்திய ரசிகர் ஒருவர், இந்திய அணி அவுஸ்திரேலியாவிடம் அடைந்த தொடர் தோல்வியின் காரணமாக வீரர்களை தவறாக விமர்சித்து பேசியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ரோகித் சர்மா, பிரவீன் குமார் ஆகியோர் ரசிகருடன் வாய் வழி மோதலில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர். தற்போது குறித்த காட்சி வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.