விஷ்ணு விஷால், தான் நடித்த படங்களில் எதில் இரண்டாம் உருவாக வேண்டும் என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்.
விஷ்ணு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இப்படத்தை விஷ்ணுவே தயாரித்துள்ளார். எழில் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் இதில் சூரி, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், விஷ்ணு விஷால் தான் நடித்த ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் எதில் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்.
இதில் பெரும்பாலான ரசிகர்கள் ‘இன்று நேற்று நாளை’ படத்திற்கே அதிக ஆதரவை கொடுத்தனர். அனேகமாக ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.