ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை கோமாளி

110

‘  ’ படக்குழு தணிக்கையின் போது நீக்கப்பட்ட காட்சிகளை காணொளியாக வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஷாரா ஆகியோர் நடிப்பில் கடந்த ஒகஸ்ட் 15ம் வெளியானது.

16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வேடிக்கையாக பேசியுள்ள கோமாளி திரைப்படம், இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான சமயத்தில் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையிலேயே தற்போது படத்தில் சென்சாருக்கு முன்னும் பின்னும் காட்சிகளில் நடத்தப்பட்ட மாற்றங்களை காணொளியாக படக்குழு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE