ரசிகர்களுக்காக சன்னிலியோனின் அடுத்த அவதாரம் உற்சாகத்தில் ரசிகர்கள

271

கனடாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட்டில் ‘ஜிஸ்ஸம் 2’ என்ற படத்தில் அறிமுகமாகி இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் தமிழில் ‘வடகறி’ என்ற படத்திலும் ஒருசில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள சன்னிலியோன் தற்போது 5க்கும் மேற்பட்ட இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிப்பை அடுத்து இயக்குனர் துறையிலும் சன்னிலியோன் கால்வைக்க போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சன்னிலியோன் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகவுள்ளதாகவும், இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சன்னிலியோன் இயக்கும் படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும், இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

SHARE