ரசிகர்களுக்கு தீபாவளி சரவெடியாய் ஹாட்ரிக் கோல் விருந்து கொடுத்த எம்பாப்பே!

107

 

லிகு1 தொடரின் ரெய்ம்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

எம்பாப்பே துடிப்பான ஆட்டம்
Stade Auguste-Delaune II மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் PSGயின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் ஒஸ்மானே டெம்பெலே கார்னர் திசையில் இருந்து எம்பாப்பேவுக்கு பந்தை பாஸ் செய்தார்.

காற்றில் பறந்து வந்த பந்தை கீழே விடாமல் எம்பாப்பே அப்படியே ஒரே கிக்கில் கோலாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து 59வது நிமிடத்தில் விரைவாக செயல்பட்டு எம்பாப்பே மீண்டும் கோல் அடித்தார்.

ஹாட்ரிக் கோல்
ரெய்ம்ஸ் அணியினர் இதற்கு பதில் கோல் அடிக்க திணறினர். அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காத நிலையில், 82வது நிமிடத்தில் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார்.

இறுதியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரெய்ம்ஸ் அணியை வீழ்த்தியது. PSG அணிக்கு லிகு 1 தொடரில் இது 8வது வெற்றி ஆகும். மேலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

SHARE