மலரே என்று தமிழ் ரசிகர்களை மலையாள பாடலை பாட வைத்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழகத்தின் பெண்ணான இவர் மலையாளத்தில் பிரேமம் என்ற படம் மூலம் நாயகியாக வலம் வர ஆரம்பித்தார்.
அந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவரிடம் ரசிகர்கள் ஸ்பெஷலாக பார்ப்பது அவரது கன்னத்தில் ஏற்பட்டிருக்கும் ரோஸ் நிறம் தான்.
ஆனால் அப்படி கன்னத்தில் ரோஸாக இருப்பது தோல் நோய் காரணம் என்கிறார்கள். அந்த நோயின் பெயர் ‘ரோஸாஸியா’, கன்னத்தின் அடியில் இருக்கும் ரத்தநாளங்கள் விரிவடையும் போது, அந்த இடத்தில் மட்டும் சிவப்பு நிறம் கூடுதலாக, தெரியும். அதனால், முகத்தசை, கன்னங்கள், மூக்கு பகுதியில் இந்த சிவப்பு நிறம் பளிச்சென்று தெரிகிறதாம்.
சாய் பல்லவிக்கு தானாக கன்னம் சிவக்கிறதோ இல்லை நோயோ ரசிகர்களை அவரது கன்னம் ஈர்த்திருப்பது தான் உண்மை.