ரசிகர்கள் கேட்டதற்காக தன் வீட்டை கொடுத்த விஜய்

447

 இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இயக்குனர் ஷெபி ‘3 ரசிகர்கள்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

இதில் 3 நண்பர்கள் சிறு வயதிலிருந்தே தீவிர விஜய் ரசிகர்களாக வளர்கின்றனர், தங்கள் கிராமத்திலிருந்து புறப்பட்டு ஒரு நாள் விஜய்யை பார்க்க சென்னைக்கு வருகின்றனர்.

அப்படி வருகையில் ஒரு பெரும் பிரச்சனையில் சிக்க, அவர்கள் தப்பித்தார்களா? விஜய்யை சந்தித்தார்களா? என்பதே மீதிக்கதையாம். இதற்காக விஜய் வீட்டில் ஒரு காட்சி எடுக்க இயக்குனர் விருப்பப்பட்டுள்ளார்.

இதை அறிந்த விஜய் அதற்கு என்ன எடுத்துக்கொள்ளுங்கள் என தன் வீட்டில் படப்பிடிப்பு நடத்த சில நாட்கள் அனுமதி வழங்கினாராம்.

15-1418628239-vijay-545-600-jpg

SHARE