நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தே நீண்ட மாதங்கள் ஆகிவிட்டது. அவ்வப்போது சிலரை வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பார். அதில் சினிமா பிரபலங்களும் ரஜினியை வீட்டில் சந்தித்து பேசுவர்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி ரஜினி தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதாக செய்திகள் வந்தன. இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் முடிவுகள் எடுக்கப்படுமோ என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் இந்த தகவலை முற்றிலுமாக ரஜினி தரப்பு மறுத்திருந்தனர். தற்போது ரஜினி ஏப்ரல் 11ம் தேதிக்கு பதிலாக ரசிகர்களை ஏப்ரல் 12ம் தேதி தான் சந்திக்கிறாராம்.
தேதி மாற்றத்திற்கான காரணம் எதுவும் சரியாக தெரியவில்லை.