ரஜினிக்கு கருத்து சொல்ல அந்த தகுதியே இல்லை – சீமான்

180

 

நேற்று ஐ பி எல் எதிராக சென்னையில் பல அமைப்பு சார்ந்தவர்கள் கள போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாம் தமிழர் கட்சி போராட்டக்கார்கள் எல்லை மீறி சிலரை தாக்கத்தொடங்கினர். குறிப்பாக தமிழக காவல்துறையை தாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்க செயல் என்று ரஜினிகாந்த் ட்வீட் செய்தார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில் ” ரஜினிக்கு எங்களை பற்றி பேசத்தகுதியில்லை, என்றாவது களபோராட்டத்தில் ஈடுபட்டவுள்ளாரா, சரி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போலீசார் ஈடுபட்ட வன்முறைக்கு எதிராக பேசினாரா. சும்மா வீட்டிலிருந்து ட்வீட்  போட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏன் பத்திரிகையாளர்களை சந்தித்து கண்டிக்கிறேன் என்று சொல்லிருக்கலாமே, நீங்கள்;கேள்வி கேப்பீர்கள் என்று நேரில் சந்திக்காமல் ட்வீட் செய்கிறார். அவர் தேவையில்லாத வேலை செய்கிறார் , எங்களை பற்றி பேச தகுதியில்லை என குறிப்பிட்டார். மேலும் பாரதிராஜா, அமீர் , கவுதமன் போன்றவர்கள் இன்று பத்திரிகையாளர்கள் சந்தித்து ரஜினியின் கருத்தை ஏற்கமுடியாது, இதில் அமீர் பேசுகையில் ரஜினிக்கு பின்னாடி இருந்து யாரோ வேலை செய்கிறீர்கள் , கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கும் போது அவருக்கு வன்முறையாக தெரியவில்லையா, ஒரு கள போராட்டத்தில் கூட ஈடுபடாமல் கருத்து சொல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.

SHARE