சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு அந்த இடத்தை யார் பிடிப்பார்கள் என்று ஒரு பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதில் முதல் வரிசையில் இருப்பவர்கள் விஜய், அஜித் தான்.
அந்த வகையில் எந்திரன் படத்திற்காக ரஜினி ரூ 40 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்பட்டது. மேலும், ஆசியா கண்டத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் எனவும் கூறப்பட்டது.
தற்போது விஜய் தன் அடுத்த படத்திற்காக ரூ 30 கோடி சம்பளமாக பெற்றிருப்பதாக பிரபல வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் ரஜினிக்கு பிறகு இளைய தளபதி விஜய் தான் அதிக சம்பளம் பெருவதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.