ரஜினியின் அடுத்த படத்தை வளர்ந்து வரும் இயக்குனரான அட்டகத்தி புகழ் ரஞ்சித் இயக்க இருக்கிறார்.

356

attakathi-ranjith18415-t Rajinikanth2forraanastoryitem

சூப்பர் ஸ்டார் லிங்கா படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் தான் அடுத்த படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது ரஜினியின் அடுத்த படத்தை வளர்ந்து வரும் இயக்குனரான அட்டகத்தி புகழ் ரஞ்சித் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பார் என்றும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற கலைப்புலி தாணுவின் ஆசை இப்படம் மூலம் நிறைவேறியுள்ளது.

ரஜினியின் அடுத்த படம் ஷங்கருடன் தான் என்று செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ரஞ்சித் தான் இயக்குனர் என்ற செய்தி தமிழ் திரைப்பட உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE