ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்த பெரிய படங்கள் வெளிவரவுள்ளது. இதில் லால் சலாம், அதற்குப்பின் வேட்டையன் ஆகிய படங்கள் உள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தலைவர் 171.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் துவக்கத்தில் தலைவர் 171 படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என்கின்றனர். இப்படத்தின் அப்டேட் குறித்து பல தகவல்கள் வெளியாகிறது.
ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என கூறப்பட்டது.
செம மாஸ் அப்டேட்ஸ்
இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் இப்படத்தில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நடிப்பதாக தெரிவிக்கின்றனர். இவர் இப்படத்தில் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலில் நடிக்கப்போகிறாராம்.
ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ஜவான் மற்றும் பதான் ஆகிய இரு திரைப்படங்களும் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் மட்டுமின்றி இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒவ்வொரு மொழிகளில் இருந்து ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கப்போகிறார்களாம்.
இதுகுறித்து வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் தெலுங்கில் இருந்து ராம் சரண், மலையாளத்தில் இருந்து பிரிதிவிராஜ், கன்னடத்தில் இருந்து கிச்சா சுதீப் ஆகியோர் தலைவர் 171 படத்தில் நடிக்கப்போவதாக அப்டேட் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகிறதா என்று.